Nov 24, 2016

படிப்பை இடைநிறுத்திய 4500 சிம்பாவே சிறுவர்கள் Featured

இன்றைய திகதிக்கு சுமார் 4,500 சிம்பாவே நாட்டு சிறுவர்கள் தங்களது பள்ளிப்படிப்பை இடைநிறுத்த்திவிட்டு திருமண பந்தத்தில் இனைந்துள்ளனர் .


18 வயதுக்கு குறைவானவர்கள் திருமண பந்தத்தில் இணைய கூடாது என்று சட்டமிருந்தாலும் இந்த ஆண்டு சிறுவர்கள் பள்ளிப்படிப்பை இடை நிறுத்துவது தொடர்ந்து வருகிறது .
3,650 பெண்பிள்ளைகள் 251 ஆண்பிள்ளைகள் தங்களுடைய இடை நிலைக் கல்வியை இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையான காலகட்டத்தில் இடைநிறுத்தியுள்ளனர் .
ஆரம்ப கல்வியை பொறுத்தவரை 305 பெண்கள் மற்றும் 13ஆண்பிள்ளைகள் நிறுத்தியுள்ளனர் .
இதற்கு பெரும்பான்மை காரணமாக இருப்பது 18வயதுக்கு முன்னரே திருமண பந்தத்தில் இணைவதேயாகும் என்கின்றனர் பாடசாலை ஆசிரியர்கள்.

பாடசாலை மட்டங்களில் இதனை தடுக்க அவர்களுக்கு செயற்திட்டங்கள் கருத்தரங்குகள் நடத்தப்பட்டாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது .

string(1) "1"
Top