Nov 28, 2016

பிடல் காஸ்ட்ரோ காலமானார்

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ, தனது 90ஆவது வயதில் காலமானார்


கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,
1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்
49 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்த காஸ்ட்ரோ உடல் நலம் குன்றியதால் 2008 ஆம் ஆண்டு அதிபர் பதவியை அவரது சகோதரர் ராவல் கெஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்
உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது

string(1) "1"
Top