Nov 28, 2016

நேபாளத்தில் நிலநடுக்கம் Featured

நேபாளத்தில் இன்று காலை 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.


சொலுகும்பு எனும் நகர் அருகே, பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது இந்த நிலநடுக்கம்.
கிழக்கு நேபாளத்துக்கு உட்பட்ட பல பகுதிகள் மற்றும் காத்மாண்டு நகரில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
ஆனால், மக்கள் அச்சத்துடன் காணப்பட்டனர்.
2015 ஏப்ரலில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கம் நேபாள மக்களின் நினைவில் சோகமாகவும், அச்சமூட்டுவதாகவும் இருந்து வருகின்றது.

string(1) "1"
Top