Dec 08, 2016

பாகிஸ்தான் விமான விபத்து :48 பேர் பலி Featured

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் (பிகே-661)


சித்ரல் நகரிலிருந்து இஸ்லாமாபாத் நகருக்கு நேற்று மாலை 3.30 மணிக்கு புறப்பட்டது.
விபத்துக்குள்ளாவதற்கு சில வினாடிகளுக்கு முன்னர் விமானியினால்
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பாக பிரதான கட்டுப்பாட்டு அறைக்கு அறிவிக்கப்பட்டதாகவும்
சிறிது நேரத்தில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் ராடாரிலிருந்து மறைந்ததாகவும்
அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அப்போதாபாத் மாவட்டம் ஹவேலியன் நகருக்கு அருகே படோலா கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில்
விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதையடுத்து ராணுவமும் ஹெலிகாப்டர்களும் அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
விமானத்தின் உடைந்த பாகங்களை மீட்புக் குழுவினர் கண்டறிந்துள்ளதாகவும்
விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இதில் பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜுனைத் ஜாம்ஷெட் மற்றும்
2 வெளிநாட்டினர் உட்பட 42 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் இருந்தனர்.
விமானத்தில் இருந்த 48 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்காகம் அறிவித்துள்ளது.

string(1) "1"
Top