Dec 07, 2016

சிங்கரின் ஏற்பாட்டில் “கிழக்கின் உதயம் - 2016”

சிங்கரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் வியக்கவைக்கும் 50% வரையான விலைத்தள்ளுபடிகளுடன்
“கிழக்கின் உதயம் - 2016” கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்கள் விற்பனையில் நாட்டில் முன்னிலை வகித்துவருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி,தனது கிழக்கின் உதயம் 2016” என்ற கொண்டாட்ட நிகழ்வின் மூலமாக மட்டக்களப்பிலுள்ள மக்களுக்கு வியப்பூட்டும் அனுபவத்தை வழங்கவுள்ளது. இந்த ஊக்குவிப்பு நிகழ்வு மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் டிசம்பர் 8 முதல் 10 வரை மூன்று தினங்களாக மு.ப 9.30 முதல் பி.ப 9.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

சிங்கர் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளரான டினேஷ் சிவகுருநாதன் அவர்கள் கூறுகையில்,இலங்கையில் கிட்டத்தட்ட அனைத்து இல்லங்களிலும் அங்கம் வகித்துவருகின்ற சிங்கர்,கிழக்கின் உதயம்மூலமாக மட்டக்களப்பு மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் வசிக்கும் விசுவாசம் மிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும் வகையில், புத்தம்புதிய உற்பத்தி அனுபவங்கள், தள்ளுபடிகள் மற்றும் மேலும் பல விசேட சலுகைகளை அவர்களுக்கு வழங்குவதே எமது நோக்கமாகும். மிக வேகமாக வளர்ச்சிகண்டு வருகின்ற வாடிக்கையாளர் தளத்திற்கு அவர்களுடைய வாழ்க்கை முறை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மிகவும் விசேடமான விலைகளில் பல்வேறு உற்பத்திகள் மற்றும் வர்த்தகநாமங்களை வழங்கும் இந்த விசேட நிகழ்வை நடாத்த வேண்டும் என்ற நம்பிக்கையை எமக்குள் ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பில் வசிப்பவர்கள் சிங்கர் - கிழக்கின் உதயம் 2016 மூலம் அரிய வாய்ப்பினை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்வர் என்பதில் எவ்விதமான சந்தேகங்களும் கிடையாதுஎன்று குறிப்பிட்டார். 

சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தால் இலங்கையில் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்ற பல்வேறு வர்த்தகநாமங்களின் கீழ் உலகத்தரம் வாய்ந்த உற்பத்திகள் சிங்கர் கிழக்கின்ற உதயம் நிகழ்வில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. குளிர்சாதனப்பெட்டிகள்,தொலைக்காட்சிப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள்,சமையலறை சாதனங்கள் முதல் மொபைல் தொலைபேசிகள்,tab சாதனங்கள் மற்றும் மடிகணினிகள் போன்ற தனிப்பட்ட பாவனை சாதனங்கள் வரை பல்வேறு உற்பத்திகளுக்கு 50% வரையான விசேட விலைத் தள்ளுபடிகளை இந்நிகழ்வில் கலந்துகொள்பவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். புதிய உற்பத்தி தொடர்பான அறிமுகப்படுத்தல் விளக்கங்கள், சமையல் பட்டறை, தையல் கண்காட்சிகள், களியாட்டங்கள்,லுமாலா சைக்கிள் சாகசங்கள், அதிர்ஷ்ட குலுக்கல் சீட்டிழுப்புக்கள் மற்றும் முழுக் குடும்பமும் பங்குபற்றி மகிழக்கூடிய வேறு செயற்பாடுகளும் இங்கே இடம்பெறவுள்ளன. பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய வேறு பல செயற்பாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் நிகழ்வில் பங்குபற்றுபவர்கள் தமது பொழுதை மிகவும் மகிழ்ச்சியாகப் போக்க முடியும். நிகழ்விற்கான அனுமதி முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. 

நிறுவனத்தின் வளர்ச்சிகண்டுவருகின்ற வலையமைப்பின் கீழ் நாடெங்கிலுமுள்ள 420 இற்கும் மேற்பட்ட காட்சியறைகளில் சிங்கர் உற்பத்திகளை கொள்வனவு செய்ய முடிவதுடன், அதற்கு இணையான வகையில் விற்பனைக்குப் பின்னரான சேவை வலையமைப்பும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இலங்கை மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டிற்கு மீண்டும்,மீண்டும் பல்வேறு இனங்காணல் அங்கீகாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன்,தொடர்ந்து 10 ஆண்டுகளாக வருடத்தின் மிகச் சிறந்த மக்கள் வர்த்தகநாமம்என்ற விருதை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

string(1) "1"
Top