Dec 01, 2016

ஐக்கிய அமெரிக்கா - இலங்கைக்கான புதிய வர்த்தக சபை ஆரம்பம்

ஐக்கிய அமெரிக்கா - இலங்கை வர்த்தக சபை நவம்பர் 29ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது .

இதனுடைய தூதுவர் அத்துள் கேஷாப்,ஆரம்ப நிகழ்வில் உரையாற்றினார் .

தூதுவர் கேஷாப்  கூறுகையில் ‘’ என் அன்புக்குரியவர்களே ! உங்கள்  அனைவருக்கும் எனது மாலை வணக்கங்கள்! இங்கே உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அத்துடன் இச்சந்தர்ப்பத்தில் உங்கள் முன் நின்று உரையாற்ற கிடைத்தமை எனக்கு கௌரவமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

நான் இங்கு ஒன்று கூற விரும்புகின்றேன். முதலில், எனது நல்ல நெருங்கிய நண்பர் ஹர்ஷ த சில்வா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர் ஒரு சிறந்த மனிதர். அவர் எப்போதும் எனது பேச்சினைச் செவிமடுப்பவர்,எனவே அவர் எனது உரை தொடர்பாக இங்கே கவனம் செலுத்தவும் தேவையில்லை, குறிப்புக்கள் எடுத்துக் கொள்ளவும் வேண்டியதில்லை. நான் இங்கு என்ன கூறப்போகின்றேன் என்பது பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும்.

அதேவேளை,நான் இன்று உங்கள் முன் உரையாற்றுவதற்கு என்னையும் இச்சந்தர்ப்பத்தில் அழைத்து வாய்ப்பினைத் தந்தமைக்காக சமந்த ரணதுங்க அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கெர்ளகின்றேன். அத்துடன் இப்புதிய வர்த்தக சபையின் ஆரம்பத்தினைப் பற்றி சற்று முன்னர் விடங்களைத் தந்த தாரா அவர்களுக்கும் எனது நன்றிகள். இது மிகவும் ஒரு நம்பிக்கைக்குரிய ஆரம்பம் என்று நான் நினைக்கின்றேன்,ஆனால் பல்வேறு வழிகளில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவுநிலைகளில் உள்ள ஒரு தொடர்நிலைச் செயற்பாடாகவே நான் இதனைக் கருதுகின்றேன். அத்துடன் அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதியாக வருகை தந்திருக்கும் திரு. அசங்க ரத்நாயக்க அவர்களையும் நான் இங்கு பார்க்க முடிகின்றது. அமெரிக்க வர்த்தக சம்மேளனம் மற்றும் இந்தப் புதிய வர்த்தக சபைக்கும் இடையில்,ஐக்கிய அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிற்கும் இடையில் எப்போதும் சிறப்பாகவுள்ள உறவுநிலையின் உயர்விற்கு நாம் இங்கு நம்பமுடியாத இரு நிறுவனங்களைப் பெற்றிருக்கின்றோம் என நான் இந்தவேளையில் உணர்கின்றேன்.

நண்பர்களே! நான் இங்கே வருவதற்கு முன்னர் ஹாவாய் ஹொனொலுலுவின் ஐக்கிய அமெரிக்க பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் ஹரி ஹரிஸ் அவர்களுடன் இருந்தேன். அத்துடன் அவருடைய விஜயம் இங்கு மிகவும் இன்றியமையாதது. ‘காலி உரையாடல்’ என்ற நிகழ்வில் அவர் தலைமையுரை ஆற்றியுள்ளதுடன்,கடற்பிரயாண மார்க்கச் சுதந்திரத்தின் முக்கியத்துவம் பற்றியும்,வர்த்தக சுதந்திரத்தின் முக்கியத்துவம் பற்றியும்,நியமங்களை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச தராதர மற்றும் விவாதங்களிற்கு அமைதி முறையான மத்தியஸ்தம் பற்றியும் மிகவும் சிறந்த முறையில் உரையாற்றினார். அத்துடன், ஐக்கிய அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையில் முதலாவதாக நடைபெற்ற எமது கடற்படையினருடனான பயிற்சியின் பின்னர் அவர் இங்கு வருகை தந்துள்ளார்.

நான் இங்கு இவை அனைத்தையும் குறிப்பிடுகின்றேன் ஏனெனில்,இந்த விஜயங்கள் யாவும் ஏதோ ஒன்றினைக் குறிப்பனவாக அமைகின்றன என்பதனை நான் உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஐக்கிய அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுநிலை உண்மையில் எப்போதும் மிகவும் சிறப்பாக இருப்பதனை நான் சில மாதங்களாக மிகவும் உணர்வுபூர்வமாக உணர்ந்து கொண்டேன். மேலும் நான் இதனைக் கூறும் பொழுது, ஐக்கிய அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள இப்புதிய வர்த்தக சபையின் உருவாக்கத்திற்குமான ஓர் உகந்த நேரமாக மட்டுமன்றி,இது ஜனவரியிலும் ஆகஸ்ட 2015 இலும் நடைபெற்ற சுதந்திரமானதும் நியாயபூர்வமானதுமான ஜனநாயகத் தேர்தல்களில் இலங்கைவாழ் மக்களின் பிரத்தியேக மற்றும் பிரதிபலிக்கின்ற தெரிவுகளிலும் கூட வெளிப்படுகின்ற விடயத்தினையே நான் இங்கு கருத்திற் கொள்கின்றேன்.

இலங்கை மக்களினால் வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்தத் தூர நோக்கினை அமெரிக்க மக்கள் நம்புகின்றார்கள். உங்களுடைய மக்கள் ஜனநாயகமுள்ள,சமாதானமுள்ள,நல்லிணக்கப்பாடுள்ள இலங்கையை அதாவது ஐக்கியமுள்ள ஓர் இலங்கையினை கட்டியெழுப்புவார்கள் என அத்தூரநோக்கில் அவர்கள் நம்புகின்றார்கள். அனைத்து இலங்கையர்களுக்கும் இனம் அல்லது தமது நம்பிக்கைகள் தொடர்பாக அக்கறையின்மை,அனைவருக்குமான சம வாய்ப்பு என்பவற்றுடன் இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டும். அட்மிரல் ஹரிஸ் அவாகளின் விஜயம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக நாம் அனைவரும் நல்ல நண்பர்களாக இருப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்பதைனயும் நாம் நம்புகின்றோம். எமது மக்கள் ஒத்துழைப்பின் பொற்காலச் சவால்களினை இந்த வருகை உள்ளடக்குகின்றது. அண்மைக் காலத்தில் எமது சமாதானப் படையின் பணிப்பாளர் இங்கே இருந்தார். ஐக்கிய அமெரிக்க ஏற்றுமதி - இறக்குமதி வங்கியின் தலைவரினால் முதன் முதலான விஜயம் ஒன்றினை நாம் பெற்றோம். நான் தூதுவராகப் பதவியேற்ற எனது பதவிக்காலம் தொடக்கம் நான்கு அல்லது ஐந்து தடவை விஜயம் செய்திருந்தோம்.

இரு நாட்களுக்கு முன்பு நகரத்திற்குள் அட்மிரல் ஹரிஸ் உடன் நாண் பயணித்துக் கொண்டிருந்த போது,கடற்படையினர் கொழும்புத் துறைமுகத்தினூடாக அழைத்துச் சென்றார். நாங்கள் துறைமுகத்தினூடாகப் பயணித்ததுடன் நாம் அங்கு பல கிறேன்களையும் கொள்கலன் கப்பல்களையும் பார்த்தோம். நாம் சத்தமாகவும் பணி நெரிசலாகவும் உள்ள துறைமுகத்தைப் பார்த்தோம். அது தென்னாசியாவில் உள்ள மிகவும் பணி நெரிசலான ஒரு துறைமுகம் ஆகும். இந்து சமுத்திரத்தின் நுழைவாயிலில் தொடர்பாடலின் மிக முக்கியமான கடல் எல்லையில் இலங்கையானது எவ்வாறு மிகவும் ஒரு கேந்திர நிலையமாக அமைந்துள்ளது என்பதைப் பற்றி நாம் கதைத்ததுடன் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான கொள்கலன் கப்பல்கள், மற்றும் கொள்கல் கிரேன்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். ஹோமர்ஸ் மற்றும் மலாக்காவிற்கு இடையில் ஒவ்வொரு கப்பலும் கடந்து சென்று கொண்டிருக்கின்றபோதும்,அத்துடன் ஒவ்வொரு கப்பலும் மலாக்கா மற்றும் ஐரோப்பிய மற்றும் சுயெஸ்ஸில் உள்ள பாப் எல் மண்டேப் கடந்து சென்று கொண்டிருக்கின்ற போதும் இலங்கையையும் கடந்து செல்கின்றது. இது உங்களுத் தெரியும். நிச்சயமாக இது பற்றி உங்களுக்குத் தெரியும்.

ஆனால் நான் இங்கு தமது ஜனநாயகத் தெரிவுகளை அடிப்படையாகக் கொண்ட இலங்கை மக்களின் எதிர்கால மகிழ்ச்சிக்காகவும் இலங்கையின் எரிபொருள் வளத்திற்காகவும் ஒரு பகுதியாக ஐக்கிய அமெரிக்கா செய்து கொண்டிருக்கின்றது என்பதனை வலியுறுத்திக் கூற வேண்டும். இந்து சமுத்திரத்தை உள்ளிட்ட உலகம் முழுவதும் கடல் மார்க்கத்தின் பாதுகாப்பையும் காவலையும் உறுதிப்படுத்துவதற்கு இது முடியும் என்பதைனை ஐக்கிய அமெரிக்கக் கடற்படையினர் எல்லாம் செய்கின்றது. உங்களுக்கு அருகே உள்ள கடல்நீரில் உள்ள உரிமைகளையும் இது உள்ளடக்குகின்றது. கடல் பேரழிவு ஆயுதங்களையும் போதைப் பொருட்கப்பல்களையும் சாத்தியமான கண்காணிப்புடன் வேலை செய்வதற்கு கொள்கலன் மற்றும் துறைமுகப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு கொழும்புத் துறைமுகத்தில் நாம் நிகழ்ச்சிகளை வைத்திருக்கின்றோம். அத்துடன் வியாபாரத்தை மேற்கொள்வதில் ஒரு பாதுகாப்பான இடமாக பொதுவில் இலங்கையின் கொழும்புத் துறைமுகத்திற்குப் பாரிய பங்களிப்புச் செய்கின்ற இந்நிகழ்வுகள் நீண்டகாலமாக உள்ளன.

எனவே, ஐக்கிய அமெரிக்கா இத்தகைய முயற்சிகளைத் தொடரும். என் அன்பிற்குரியவர்களே! இத்தகைய முயற்சிகளை இலங்கையின் எரிபொருள் பொருளாதராத்தின் அதிகரிப்பிற்கு உதவும் வகையில் வரன்முறையாக ஆறு தசாப்தங்களாக கட்டியெழுப்பப்படுகின்றன.

1956 தொடக்கம் அனைத்து இலங்கை மக்களின் நன்மைகளிற்குமாக மனிதாபிமான உதவிகள் மற்றும் அபிவிருத்தியில் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேலாக ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் வழங்கியுள்ளது. 2015 இல் இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்காவின் அபிவிருத்திக்கான பங்களிப்பாக கிட்டத்தட்ட சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது. எனவே, அந்தப் பாரம்பரியம் இன்னமும் தொடரும். நான் முன்பு கூறியதைப் போல,ஐக்கிய அமெரிக்கா இலங்கையின் பாரிய ஏற்றுமதிச் சநதையாக உள்ளது. எமது கணிப்பீட்டின்படி,2015 இல் ஐக்கிய அமெரிக்காவிற்கான இலங்கை ஏற்றுமதிகள் மொத்தமாகப் பெரும்பாலும் 3 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகும். இது

இலங்கையின் ஏற்றுமதிகளின் மொத்தத்தில் பெரும்பாலும் 27 வீதத்தினைப் பிரதிபலிப்பதுடன் கடந்த வருடத்தில் 7 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

இலங்கையிலிருந்து 50 வீதத்திற்கும் மேற்பட்ட புடவைத் தொழில் ஏற்றுமதிகள் செல்லும் இடமாக அமெரிக்காவை நாம் பார்க்கின்றோம்.

அண்மையில்,சுமார் 20ää000 இலங்கையர்களுக்கு அதிக சம்பளத்தை வழங்கும்,வேலைவாய்ப்பு சந்தர்ப்பத்தை தரும், பெரும்பாலும் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள பிரபல நிறுவனங்களான சுமார் 30 அல்லது 35 அமெரிக்க நிறுவனங்களுக்கான சந்திப்பினை எனது வதிவிடத்தில் ஒழுங்கு செய்திருந்தேன்.

நண்பர்களே,இது ஒரு தற்செயல் நிகழ்வல்ல. அமெரிக்காவுக்கு பெருமளவில் உற்பத்திகளின் ஏற்றுமதிகள் தொடர்பில் இலக்கு வைத்துள்ளமை ஒரு தற்செயல் நிகழ்வல்ல.உலகில் எங்கும் காண முடியாத மிகவும் நம்பகமான வர்த்தகப் பங்காளர்களாக அமெரிக்க நிறுவனங்கள் உள்ளன. அது உண்மை என நான் ஏற்றுக் கொள்கின்றேன். அமெரிக்க வர்த்தக சம்மேளனம் இதனை நன்றாக அறியும். உயர்ந்தளவிலான நன்னடத்தை தரங்கள், பெருநிறுவன சமூகப் பொறுப்பு,சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, உலகத்தரமான புத்தாக்கமும்,வடிவமைப்பும்,உற்பத்தி உத்திகள் என்பவற்றுடன் உயர்தரமான பொருட்கள் மற்றும் உற்பத்திகளையும், சேவைகளையும் அவை வழங்குகின்றன. இவை அனைத்தும் சுற்றுச்சூழல் மற்றும் ஊழியர்களுக்கான பெருநிறுவன பொறுப்புடன் மாத்திரம் அல்லாது,பெரும் நன்மைக்காகவும் முன்னெடுக்கப்படுகின்றன. அமெரிக்க நிறுவனங்கள் கொண்டு வரும் இந்த விழுமியங்கள்,உங்கள் நிறுவனங்கள் கொண்டிருக்கக் கூடிய மிகச் சிறந்த பங்காளர்களாக அமெரிக்க நிறுவனங்களை மாற்றுகின்றன. அன்றைய தினம் நான் ஒழுங்கு செய்திருந்த சந்திப்பும் அதனை உறுதி செய்கின்றது.

நண்பர்களே,சில மாதங்களுக்கு முன்னர் நான் ஹைதராபாத்திற்கு விஜயம் செய்திருந்தேன். தெற்காசியவினை நோக்கிய அமெரிக்க கொள்கை குறித்து பிராந்தியத்தினைச் சேர்ந்த இளம் அதிகாரிகளின் மாநாடு ஒன்றிற்காக நான் செல்ல வேண்டியிருந்தது. நூன் அங்கு சென்றிருந்த வேளையில் ஹைதராபாத்தில் இருந்து ஃபோர்சுன் 50 அமெரிக்க நிறுவனங்களிற்கு விஜயம் செய்வதற்கான அதிர்ஷ்டம்  எனக்கு கிடைத்தது. ஃபேஸ்புக் , கூகுள்,பிரட் என்ட் விட்னி ஆகியவற்றுக்கு நான் விஜயம் செய்தேன்.ஹைதராபாத் அமெரிக்க
வர்த்தக சம்மேளனத்தினை நான் சந்தித்தேன். ஹைதரபாத்தில் அமெரிக்க நிறுவனங்களால் ஒருவாக்கப்பட்ட புத்தாக்க மற்றும் வடிவமைப்பின் சூழல் தொகுதி ஆச்சரியமளிக்கக் கூடியது. தகவல் தொழில்நுட்ப தளத்தில் மாத்திரமன்றி, விமானத்தள பிரிவிலும் இது காணப்படுகின்றது. ஆமெரிக்க நிறுவனங்களின் ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் கொண்ட பெருநிறுவன பல்கலைக்கழகங்களிற்கும் நான் சென்று,ஃபேஸ்புக் மற்றும் கூகுளில் பணியாற்றும் இலங்கையர்களை நான் சந்தித்தேன். அது பெரு வியப்பாக இருந்தது. அந்த இளைஞர்களுடன் நான் கதைத்தேன். நீங்கள் எவ்வாறு இங்கு வந்தீர்கள் என்பது குறித்து நான் கேட்டேன். நம்மிடம் திறமை மற்றும் திறன்கள் இருக்கின்றன. நேர்காணல் செயற்பாட்டின் ஊடாக நாம் இந்த இடத்திற்கு வந்தோம் என அவர்கள் தெரிவித்தனர். இந்த நிறுவனங்களின் சில அதிநவீன தொழில்களில் நாம் பணியாற்றுகின்றோம். நூன் அவர்களது முகாமையாளர்களிடம் கதைத்தேன். இந்த இலங்கை இளைஞர்களை ஏன் வேலைக்கு அமர்த்தியுள்ளீர்கள் என கேட்டேன். எமது பரீட்சைகள் அனைத்திலும் அவர்கள் சித்தி பெற்றனர். அவர்கள் வியப்பளிக்கும் வகையி;ல் பயிற்சி பெற்றவர்களாகவும், கற்றவர்களாகவும் உள்ளனர். எமது நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு தகுதியான ஊழியர்களாக அவர்கள் உள்ளனர் என்ற பதில் எனக்கு கிடைத்தது.

ஏன் இந்த இளைஞர்கள் ஹைதராபாத் செல்கின்றனர்? ஏன் அந்த இளைஞர்களும், யுவதிகளும் இங்கு பணிபுரியக் கூடாது? என நான் எனக்குள் நினைத்துக் கொண்டேன். உங்களுக்குத் தெரியுமா?

எனவே,நான் உங்களுக்கு ஒரு சவாலை முன்வைக்கின்றேன். ஹர்ஷ இதனை கேள்வியுற்றிருக்கின்றார். எனவே,அவர் அதனை குறிப்பெடுக்கவில்லை. என்னுடையதை விட ஐந்து மடங்குகள் சிறப்பான அவருடைய உரை தொடர்பில் அவர் கவனம் செலுத்துகின்றார். அவர் ஒரு அரசியல்வாதி. அதனை எவ்வாறு செய்வது என அவருக்குத் தெரியும். நான் இதில் வெறும் கற்றுக்குட்டி.

உங்களுக்கான என்னுடைய சவால் உங்களுடைய புவியியல் நிலை குறித்து உங்களுடைய ஜனநாயக விழுமியங்கள் குறித்து,பன்மைத்துவம் குறித்து, புத்தாக்கம் குறித்து,ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் குறித்து மாத்திரமன்றி கவனம் செலுத்தும் அதேவேளை,கற்பிப்பதற்கான ஆற்றல் மற்றும் ஈர்க்கக் கூடிய திறன்களை கொண்ட உங்களுடைய பல்கலைக்கழகங்களில் இருந்து வெளிவரும் மாணவர்கள் இருக்கின்ற போது,விரைவில் அந்த நாள் வரும்,நீங்கள் எதிர்பார்ப்பதனை விட விரைவாக, உயர்தரமான இலங்கை தேயிலைக்காக மாத்திரமன்றி இலங்கையின் தகவல் தொழில்நுட்ப நிபுணத்திற்காகவும் அறியப்பட்ட தேசமாக இலங்கை மாறும்.

நண்பர்களே,அதுவே என்னுடைய நம்பிக்கை. நான் உங்களுடன் இணங்குகின்றேன். நானும்,நீங்களும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளோம்.

நண்பர்களே,இலங்கை - அமெரிக்க உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இணைப்பினை இதைப் போன்ற சம்மேளனங்கள் செய்ய முடியும் என்பது எனது நம்பிக்கையாக உள்ளது. பெருமளவிலான சந்தர்ப்பங்கள் அங்கு உள்ளன என நான் நினைக்கின்றேன். இந்த அறையில் உள்ள அனைவரதும் எண்ணங்களுடன்,இலட்சிய தொலைநோக்குடன் புடவை மற்றும் இறப்பம் மாத்திரமன்றி, ஏனையவையும் அமெரிக்காவிற்கு செல்வதனை காண முடியும். இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பணியாற்றும்ää அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எமது நாடுகளுக்கு இடையில் பரஸ்பல வளத்தை உறுதி செய்வதனை நாம் காண முடியும்.

நண்பர்களே, வாழ்க்கையில் இலட்சிய இலக்குகளை கொண்டிருப்பது மிகவும் முக்கியமானது என நான் கருதுகின்றேன். சந்தர்ப்பங்களை எவ்வாறு நாம் அதிகரிக்க முடியும் என்பதனை கண்டறிவதற்கு இந்த புதிய அமெரிக்க-இலங்கை சம்மேளனத்தை இலங்கை வர்த்தகச் சம்மேளனம் உருவாக்கியுள்ளது சிறப்பானது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உச்ச உரையாடலாக ஏற்கனவே பங்காளித்துவ உரையாடலை நாம் ஆரம்பித்திருக்கின்றோம். வர்த்தக மற்றும் முதலீட்டு வரைபுநகல் உடன்படிக்கை உரையாடலை நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். இதுவே மிகவும் பிரதானமான எமது பொருளாதார உரையாடலாக உள்ளது.
அமெரிக்க - இலங்கை உறவுகளின் புதிய உயரத்தின் சாத்தியத்தை எமது இரண்டு நாட்டு மக்களுக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் பயன்படுத்துவதே தொழில் சார்ந்து நாம் செய்யக் கூடியதாகும். இந்த புதிய நிறுவனங்கள் உருவாக்கப்படல் மற்றும் உங்களுடைய பங்களிப்புடன் இதனை நாம் எட்ட முடியும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.
இந்த நாளை சாத்தியமாக்கிய அனைவருக்கும் என்னுடைய பாராட்டு. வருகை தந்தைமைக்காக அனைவருக்கும் நான் தெரிவிக்க விரும்புகின்றேன். இலங்கை,கொழும்பு அமெரிக்கத் தூதரகத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் சார்பில்,அமெரிக்க-இலங்கை பொருளாதார வர்த்தகங்கள்,தொழில் மற்றும் முதலீட்டு உறவுகளுக்கான பிரகாசமான தொலைநோக்கினை எட்டுவதற்கு எமது முழு ஒத்துழைப்பினையும் நாம் நிச்சயமாக வழங்குகின்றோம் என நான் உறுதியளிக்கின்றேன். நன்றி!’’என்று தெரிவித்தார்

 

img2

string(1) "1"
Top